கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவின் வூஹான் மாநிலத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 10 தொடக்கம் 19 வயதுக்குற்பட்டவர்களில் ஒரு வீதமானவர்களே நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதும், இறந்துள்ளதும் கண்டறியப் பட்டுள்ளது.
AFB செய்திச் சேவை இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது.
சிறுவர்களுக்கு நோய்த் தொற்று குறைவாக உள்ளமைக்கான சரியாக காரணம் இதுவரை கண்டறியப்படாத அதே வேலை அவர்கள் மூலம் நோய்த் தொற்று பரவாது என்று அர்த்தமல்ல என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போல் 10 வயதுக்குற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று குறைவாக இருந்தமையும், மரணங்கள் குறைவாக நிகழ்ந்தமையும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
