Our Feeds


Friday, March 20, 2020

www.shortnews.lk

ஓடும் பஸ்ஸில் மாணவியை கற்பழித்து கொலை செய்தவர்களுக்கு இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றியது இந்தியா

 


23 வயதான பிஸியோதரபி மருத்துவ மாணவி சினிமா பார்த்து விட்டு வரும் வழியில் 2012ம் ஆண்டு ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய நண்பர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர்.

இந்தியாவின் தலை நகர் டெல்லியில் நடைபெற்ற இந்த கொடுமை உலகையே உழுக்கியது.

கொலைகாரர்களுக்கு எதிராக வழக்கு நடைபெற்று அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

இன்று (20) அதிகாலை 5.30 க்கு இந்தியாவின் தீகார் சிறையில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நீதி ஜெயித்து விட்டதாக நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »