Our Feeds


Friday, May 29, 2020

www.shortnews.lk

ரஷ்யாவில் கொரோனாவுக்கு 101 டாக்டர்கள் பலி

 


கொரோனாவுக்கு ரஷ்யாவில் 101 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில், அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து, 3 இலட்சத்து, 70 ஆயிரம் பேருடன், ரஷ்யா, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அங்கு, கொரோனாவுக்கு, 3,968 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவில், கொரோனாவுக்கு, 101 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், 300 டாக்டர்கள் இறந்துள்ளதாக, இறந்த டாக்டர்களின் நண்பர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்து, பெயர்களை வெளியிட்டுள்ளனர். இதனால், ரஷ்ய அரசு, கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »