Our Feeds


Saturday, May 16, 2020

www.shortnews.lk

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது இதுதான்?

 

அரசாங்கம் மீண்டும் நாட்டை திறக்கும் போது மக்கள் பின்பற்ற வேண்டிய புதிய முறைமைளுடனான வழிகாட்டல்களை அரச மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கொழும்பில் உள்ள தோட்டப்புற வீடுகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதன்படி, இன்று கொழும்பு 12இல் உள்ள பண்டாரநாயக்க மாவத்தை பகுதியின் வீடுகளில் இவ்வாறு பி.சீ.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 10 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த 10 பேரில் 9 பேர் கடற்படையினர் என்றும், மற்றும் ஒருவர் அவர்களுடன் தொடர்புகளை பேணிய ஒருவர் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 449 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 337 பேர் கடற்படையினர் என்றும், ஏனையவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் தொற்றுறுதியாகி மருத்துவமனைகளில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »