தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப் பொம்மை இனம் தெரியாத நபர்களினால் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அண்மையில் வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வைக்கப்பட்டுள்ள உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு உள்ளது. நான் ஒரு தமிழ் இன துரோகி என்ற பதாகையை குறித்த உருவ பொம்மையில் தொங்க விடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துக்களைத் தெரிவித்திருந்த கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார்.
Wednesday, May 13, 2020
யாழில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சுமந்திரனின் உருவப் பொம்மை...
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »



