Our Feeds


Thursday, May 21, 2020

www.shortnews.lk

போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கடமை நேரத்துக்குபின் வந்த காரணத்தினால் அவர்களை பதிவேட்டில் கையெழுத்து இடுவதற்கு அனுமதி வழங்காததையடுத்து அவர்கள் வைத்தியசாலை நிர்வாகப் பிரிவின் முன் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் (20) ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொலநறுவை மாவட்டத்தைச் சோந்த சுமார் 350 ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்கள் தினமும் கடமைக்காக வைத்தியசாலைக்கு பஸ்;வண்டியில் வந்து செல்லுகின்றனர். இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோய் நிலைமையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக அவர்கள் வீடுகளுக்கு சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டதையடுத்து அவர்களுக்கு அரசாங்க அதிபர் ஊடாக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (20) பொலநறுவையில் இருந்து கடமை நேரத்தின் பின்னர் வந்த காரணத்தினால் வைத்தியசாலை நிர்வாகம் பதிவேட்டில் கையெழுத்து வைக்க ஊழியர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
இதனை எதிர்த்து குறித்த ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பொலிசார் குவிக்கப்பட்டதுடன் வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாரஞ்சினி இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அறிவித்ததுடன் ஆர்ப்பாட்டக்காரருடன் பேச்சுவார்த்தை நடாத்தினார் .
இனிமேல் குறித்த கடமை நேரத்துக்கு வரவேண்டும் என தெரிவித்து அவர்களுக்கு இன்று ஒரு அவகாசம் வழங்கி பதிவேட்டில் கையொப்பம் இட இடமளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து தமது கடமைகளுக்கு சென்றனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »