Our Feeds


Thursday, May 21, 2020

www.shortnews.lk

மேல்கொத்மலை ஆற்றில் தற்கொலை செய்ய முயற்சித்த பெண் மீட்பு !

 

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை செய்துகொள்ளவென குதித்த பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். அதேசமயம் தற்கொலை செய்ய முயன்ற பெண்ணைக் காப்பாற்ற நீர்தேக்கத்தில் குதித்த இளைஞனை தேடி மீட்கும் பணியில் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டு வருகின்றனர்
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
இன்று காலை 10 மணியளவில் தலவாக்கலை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் தற்கொலை செய்வதற்காக கொத்மலை நீர்தேக்கத்தில் குதித்துள்ளார்.
இதனை கண்ட அவ்வழியில் சென்ற 32 வயதுடைய இளைஞன் ஒருவர் குறித்த பெண்ணை காப்பாற்ற நீர்தேக்கத்தில் பாய்ந்து அந்த பெண்ணை மீட்க போராடியுள்ளார்.
இந்த நிலையில் விரைந்து செயற்பட்ட தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவான் பெர்னாந்து உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இருந்த போதிலும் குறித்த பெண்ணை காப்பாற்ற நீர்தேக்கத்தில் குதித்த இளைஞனை காணவில்லை. அவரை மீட்க பொலிஸார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் ஆற்றிலுள்ள சேற்றில் அவர் சிக்குண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »