Our Feeds


Wednesday, May 27, 2020

www.shortnews.lk

பஸ்ஸின் ஆசனங்களுக்கு ஏற்ப்ப பயணிகளை அழைத்து செல்லும் சட்டம் கொண்டுவரப்படும் - போக்குவரத்து அமைச்சர்

 


பஸ்களிலுள்ள ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை அழைத்து செல்லுதலை சட்டமாக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை
எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை அழைத்து செல்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தப்படும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்குடன் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »