Our Feeds


Sunday, June 14, 2020

www.shortnews.lk

போதைப் பொருளுடன் 411 பேர் நேற்று கைது

 



திடீரென மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் 170 பேர் உட்பட 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (13) காலை 6 முதல் இன்று (14) காலை 5 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் கஞ்சாவுடன் 88 பேர் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சட்டவிரோத மதுபானத்துடன் 102 பேர், கோடாவுடன் 18 பேர் மற்றும் வேறு போதைப்பொருளுடன் 19 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »