Our Feeds


Sunday, June 14, 2020

www.shortnews.lk

நாளை முதல் சகல மிருகக் காட்சி சாலைகளும் திறக்கப்படும்

 



இலங்கையில் உள்ள சகல மிருக காட்சிசாலைகளும் நாளை (15) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் அறிவுரைகளையும், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளையும் பின்பற்றி மிருக காட்சி சாலைகளை திறக்கவுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சகல மிருக காட்சிசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »