Our Feeds


Tuesday, June 9, 2020

www.shortnews.lk

கொரோனா தொற்றிய 563 கடற்படை வீரர்கள் குணம் பெற்றுள்ளனர்

 



இலங்கையில மேலும் 41 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 563 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 990 பேர் இதுவரையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 1857 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 856 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »