Our Feeds


Tuesday, June 9, 2020

www.shortnews.lk

உலக அளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 6வது இடம் இந்தியாவுக்கு

 

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி ஆறாவது இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தவன்ணம் உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து சேவைகள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் 236657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6642 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 114073 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 115942 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதன்மூலம் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி 6வது இடத்தில் இந்தியா உள்ளது. 1 965 708 நோய்த்தொற்று எண்ணிக்கையுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் 68.5 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3.98 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 33.50 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்த நாடுகள் வருமாறு:-
அமெரிக்கா - 1 965 708
பிரேசில்- 646 006
ரஷ்யா- 449 834
ஸ்பெயின்- 288 058
பிரிட்டன்- 283 311
இந்தியா- 236 657
இத்தாலி - 234 531
பெரு- 187 400
ஜெர்மனி - 185 414
துருக்கி - 168 340
ஈரான் - 167 156
பிரான்ஸ்- 153 055
சிலி - 122 499
மெக்சிகோ -110 026

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »