தாவூதி போரா சமூகத்தின் தலைவர் முபாதல் சைபுதீன் உள்ளிட்ட 45 பேர் இலங்கையில் தங்க அனுமதியளிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது மும்பையில் தங்கியுள்ள போரா சமூக உயர்மட்ட குழு, கொரோனா நெருக்கடி கட்டத்தில் இலங்கை வந்து தங்கவுள்ளது.
இதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா தணியும் வரை அவர்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியா- இலங்கை வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் இது குறித்த பேச்சில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முபாதல் சைபுதீன் மற்றும் அவரை தொடர்பவர்கள் 45 பேரே நாட்டுக்கு வரவுள்ளனர். அவர்கள் தனி விமானம் மூலம் இலங்கை அழைத்து வரப்படவுள்ளதாகவும், பண்டாரவளையிலுள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழுவின் வருகையை வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் உறுதிசெய்துள்ளனர்.
போரா சமூகத்தின் தலைவர், ஒரு நாட்டின் தலைவரை போல கருதப்படுபவர். அவர்கள் நாட்டிற்கு வர அனுமதி கோரினார்கள். அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நாட்டிற்கு வந்ததும் இராணுவத்தினர் மூலம் பண்டாரவளைக்கு அனுப்பப்பட்டு ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப் படுவார்கள். சுகாதார அமைச்சு, இராணுவம் அதனை மேற்பார்வை செய்யும். அவர்கள் மும்பையிலிருந்து புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்னதாக பி.சிஆர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதன்படி, ஹோட்டலின் ஊழியர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பர் - என அதிகாரியொருவர் தெரிவித்தார்.
போரா சமூகத்தினர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி தனி மத பிரிவாக செயல்படுபவர்கள் ஆவர்.
போரா சமூகத்தினர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி தனி மத பிரிவாக செயல்படுபவர்கள் ஆவர்.
