Our Feeds


Sunday, June 14, 2020

www.shortnews.lk

அமெரிக்காவில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் மற்றொரு கருப்பினத்தவர் பலி - மீண்டும் போராட்டம் சூடு பிடிப்பு

 


அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்லோய்ட் என்ற கறுப்பினத்தவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெரும் போராட்டம் நடந்த நிலையில், மற்றொரு கறுப்பினத்தவர் சுட்டு கொல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து மற்றுமொரு போராட்டம் துவங்கியுள்ளது.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள உணவகம் முன்பு ரேஷர்ட் புரூக்ஸ்(27) என்ற கறுப்பின இளைஞர், நேற்று முன்தினம் (ஜூன் 12) இரவு காரில் தூங்கி கொண்டிருந்தார். இதனால், வாடிக்கையாளர்கள் சாப்பிட வர முடியவில்லை என உணவக ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் அங்கு வந்து, அந்த இளைஞர் மது அருந்தியுள்ளாரா என சோதனை செய்ய முயன்றனர். அதற்கு ஒத்துழைப்பு அளிக்க புரூக்ஸ் மறுத்துவிட்டார். மேலும், கைது செய்ய முற்படும் போது, பொலிஸாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து கொண்டு ஓட முயன்றார்.

அவரை பொலிஸார் பின் தொடர்ந்த போது, புரூக்ஸ் சுட முயன்றார். இதனையடுத்து, பொலிஸார் தம்மிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதில் புரூக்ஸ் பலத்த காயமடைந்தார். இதில் படுகாயமடைந்த புரூக்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த மோதல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து அட்லாண்டா நகர பொலிஸ் தலைவர் எரிக்கா ஷீல்ட்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.



இதனை கண்டித்து, அட்லாண்டா நகரில் போராட்டம் ஆரம்பித்துள்ளது. பல இடங்களில் வீதிகளை மறித்து போராட்டம் நடந்து வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »