Our Feeds


Sunday, June 14, 2020

www.shortnews.lk

பலவீனமான ஆட்சியினால் நாட்டில் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன - சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

 


பலவீனமான அரசாங்க ஆட்சி காரணமாக நாட்டினுள் பல்வேறு சிக்கல்கள்

நாட்டினுள் உள்ள பலவீனமான அரசாங்க ஆட்சி காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டினுள் தற்போது பல்வேறு குற்றங்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் பொருளாதார நிலைமையினால் மக்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாகவும் மனிதாபிமானத்தை முதன்மையாக கொண்டு மனிதன் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »