Our Feeds


Friday, June 12, 2020

www.shortnews.lk

மங்கள, பண்ணியன்துவகேவுக்கு அடுத்ததாக நிலூகா ஏக்கநாயகவும் தேர்தலில் இருந்து ஒதுங்கினார் - குழப்பத்தில் சஜித் அணி

 


ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில்  இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் நிலுகா ஏக்கநாயக்க, தேர்தல் களத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நிலுகா ஏக்கநாயக்க உத்தியோகப்பூர்வமாக தனது அறிவிப்பை கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இலங்கை பிரஜைகளின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் நாடு என்ற விதத்தில் எதிர்கால நிலைமைகள் சரியான வழியில் சென்றுக் கொண்டிருப்பதாக அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

அத்துடன், நாடு வெற்றியடைந்து வரும் இந்த சந்தர்ப்பத்தில் நாடு சிறந்ததொரு இடத்திற்கு வரும் என்ற நம்பிக்கை தன்னுள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நம்பிக்கை காரணமாக தான் இந்த தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஆளுநரான தான் பதவி வகித்த காலத்தில் நாட்டிற்காக நிறைவேற்றிய கடமைகளை கருத்திற் கொண்டு பாராளுமன்றத் தேர்தலில் தன்னை போட்டியிட அழைத்தமைக்கான ஐக்கிய மக்கள் சக்திக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மாத்தறை மாவட்டத்தில் களமிறங்கிய முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர முதலில் தேர்தல் களத்திலிருந்து விலகிக் கொண்டிருந்தார்.

அதன்பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட களமிறங்கிய மற்றுமொரு வேட்பாளரான டேனட் பன்னியன்துவகேயேயும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் களத்திலிருந்து விலகியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வேட்பு மனுவில் கையெழுத்திட்ட மூன்று வேட்பாளர்கள் கடந்த ஒரு வார காலத்திற்குள் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »