
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும் தேவை உள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்ட பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதேஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வாறான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து தேர்தல் வியாபாரத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்படுத்திய சிக்கல் காரணமான கட்சி அழிந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையினால் பாரம்பரிய ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மனஉலைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஆதரவாளர்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.