Our Feeds


Tuesday, July 28, 2020

www.shortnews.lk

தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு - தேர்தல் ஆணைக்குழு

 

பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியின் பின்னர், பிரசாரத்திற்கான பொறிமுறைகளை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணை்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் தினமான எதிர்வரும் 4ஆம் திகதி எந்த பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை சமூக ஊடகங்களில் வௌியிடுவதற்கு முன்னர், குறிப்பிட்ட தரப்பிற்கு அறிவிக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.



இதேவேளை, வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமானது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »