Our Feeds


Thursday, July 9, 2020

www.shortnews.lk

அவதானம் - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா

 


கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்திலுள்ள கைதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் 450 பேர் தற்போது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 56 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை கைதி, மூன்று மாத காலமாக கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று (09) காலை மாரவில பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக கடமையாற்றி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.



இது தொடர்பில் தொடர்ந்து மேற்கொள்ளபட வேண்டிய PCR பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் என்பன பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவினரால் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »