Our Feeds


Wednesday, July 22, 2020

www.shortnews.lk

புத்தளத்தில் நியாயமாக தெரிவது கண்டியில் அநியாயமாக தெரிவது ஏன்? ரவூப் ஹக்கீமிடம் இஸ்திஹார் கேள்வி

 


புத்தளம் மாவட்டம் இழந்த முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஓரணியில் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக கூறி தராசு சின்னத்தில் மு.கா வும் அ.இ.ம.க வும் இணைந்து போட்டியிடுகின்றன. 

இழந்த பிரதிநிதித்துவம் கண்டிப்பாக புத்தளத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதே காரணத்திற்காக கண்டியில் டயமன் சின்னத்தில் நான் போட்டியிடும் போது வாக்குகளை சிதரடிப்பதற்காக போட்டியிடுவதாக பரப்புரை செய்வது எப்படி நியாயமாகும்? புத்தளத்திற்கு நியாயமாக தெரிவது கண்டியில் அநியாயமாக தெரிவது ஏன்? என டயமன் சின்னத்தில் சுயேற்சையாக போட்டியிடும் முதன்மை வேட்பாளர் இஸ்திஹார் இமாதுத்தீன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான பரப்புரைகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் கண்டி மாவட்டத்தில் டயமன் சின்னத்தில் அக்குரணை பிரதேச சபை தலைவர் இஸ்திஹார் இமாதுத்தீன் தலைமையிலான குழு போட்டியிடுகிறது. ஒரு சுயேற்சை குழு பரபரப்பாக மக்கள் மத்தியில் பேசப்படும் அளவுக்கு இஸ்திஹார் தலைமைலான குழுவினரின் பிரச்சாரம் வேகமாக நடைபெற்று வருகின்றது.

இஸ்திஹார் வாக்குகளை பிரிக்கிறார் என மு.க தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னால் அமைச்சர் ஹலீம் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உண்மையில் நான் வாக்குகளை சிதரடிக்க போட்டியிடவில்லை என்பது வரலாற்று உண்மை. 

2000ம் ஆண்டு, 2005 ஆகிய பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து 3 பேர் கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் தெரிவானார்கள். 2010 இல் 4 பேர் பாராளுமன்றம் சென்றார்கள். ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது 2015ம் ஆண்டு அது 2 ஆக குறைந்து விட்டது. 

3ஆக இருந்தது 2ஆக குறைந்ததை பற்றி யாரும் கவலைப்படவில்லை. அதனை அதிகரிப்பதை பற்றி யோசிக்கவில்லை. யோசிக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் 2 ஆக இருக்கும் பிரதிநிதித்துவம் 3 

ஆக மாறிவிடுமோ என்று அச்சப்படுவதுதான் வருத்தமளிக்கிறது. முஸ்லிம் பிரதிநிதித்துவம் அதிகரிப்பது சமூகத்திற்கு பாதுபாப்பானது. சமூகத்திற்கு அதிக நன்மையை பெற்றுத் தரக்கூடியது. 

ஆனால் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான மு.கா தலைவர் ஹக்கீமும், முன்னால் அமைச்சர் ஹலீமும் தம்மைத் தாண்டி 3வது ஒருவர் பாராளுமன்றம் போய்விடுவாரோ என்று அச்சப்படுவது ஏன்? 

சமூகத்தின் தலைவர்கள் என்றால் சந்தோஷப்படுவார்கள். ஆனால் இவர்கள் அச்சப்படுகிறார்களே?

நான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதால் ஹக்கீமோ, ஹலீமோ தோல்வியடைய மாட்டார்கள். ஆனால் 2 பிரதிநிதித்துவம் 3 ஆக மாறும். இது சமூகத்திற்கான வெற்றி.

கண்டியில் என்னை விமர்சித்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் நாடு முழுவதும் என்ன செய்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

சஜித்துக்கு வாக்களிப்பதுதான் சமூகத்திற்கு பாதுகாப்பு என கண்டியில் பேசும் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறது. அங்கு மரத்திற்கு வாக்களிப்பதுதான் சமூக பாதுகாப்பு என்று கூறி சஜித்துக்கு எதிராக தனியாக போட்டியிடுகிறார்கள்.

இதே வேலை முன்னால் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அ.இ.ம.க வும் சஜித் அணியும் ஒன்றிணைந்து போட்டியிடுகிறார்கள். 

ரிஷாத் தலைமையிலான அணியோ சஜித்துக்கு வாக்களிப்பது மட்டக்களப்பில் பாதுகாப்பு என்கிறார்கள். 

அதே போல் அம்பாறை மாவட்டத்தில் சஜித் அணியும், ஹக்கீம் தலைமையிலான மு.கா வும் இணைந்து போட்டியிடுகின்றன. அமைச்சர் ரிஷாத் தலைமையிலான அ.இ.ம.க தனித்து போட்டியிடுகின்றது. 

அம்பாறையில் சஜித் தலைமையிலான அணிக்கு வாக்களிப்பது தான் பாதுகாப்பு என வாக்குக் கேட்கிறார் மு.கா தலைவர் ஹக்கீம். 

இதே வேலை தனித்துக் கேட்க்கும் அ.இ.ம.க வுக்கு வாக்களிப்பதுதான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு என்கிறார் ரிஷாத் பதியுத்தீன். 

புத்தளத்திலோ ஹக்கீம், ரிஷாத் இருவரும் ஒன்றிணைந்து தராசு சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். அங்கு இழந்த பிரதிநிதித்துவத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறி தராசு சின்னத்திற்கு வாக்களிப்பதுதான் சமூகத்திற்கு பாதுகாப்பு சஜித் அணிக்கு வாக்களிப்பது சமூக பாதுகாப்பு இல்லையென பிரச்சாரம் செய்கிறார்கள்.

இதேபோல் வன்னியில் ரிஷாத் பதியுத்தீனுக்கு மு.கா போராளிகள் வாக்களிக்க வேண்டும் என்கிறார் ரவுப் ஹக்கீம்.

ஒரே நாக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் எப்படியெல்லாம் வலைந்து வலைந்து பேசுகிறது என்பதை கொஞ்ச நேரம் சிந்தித்துப் பாருங்கள்.

ரவுப் ஹக்கீமிம் பார்வையில்….

கண்டி முஸ்லிம்களை பாதுகாக்கும் சஜித் மட்டக்களப்பு முஸ்லிம்களை பாதுகாக்க மாட்டார்.

அம்பாறை முஸ்லிம்களை பாதுகாக்கும் சஜித் புத்தளம் முஸ்லிம்களை பாதுகாக்க மாட்டார். 

அதே போல் ரிஷாத் பதியுத்தீன் பார்வையில்….

மட்டக்களப்பில் சஜித் முஸ்லிம்களை பாதுகாப்பார் அம்பாறையில் பாதுகாக்க மாட்டார்.

வன்னியில் முஸ்லிம்களை பாதுகாக்கும் சஜித் புத்தளத்தில் முஸ்லிம்களை பாதுகாக்க மாட்டார்.

இதனை பார்த்தால் கேளியாக தெரியவில்லையா? அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா என்று சொல்லும் சினிமா பட சிரிப்புக் கதைகள் போல் இவர்கள் அரசியல் பொய்களும் மாறி விட்டதை சமூகம் அவதானிக்கமால் இருக்கிறது என்று நினைக்கிறார்கள் போல?

புத்தளத்தில் சமூக பாதுகாப்புக்காக தராசு சின்னத்தில் ரவுப் ஹக்கீம், ரிஷாத் கூட்டணிக்கு சஜித்தை புறக்கணித்து தனித்து போட்டியிட முடியுமென்றால், 

அம்பாறையில் சமூக பாதுகாப்புக்காக ரிஷாத் பதியுத்தீனுக்கு சஜித்தையும், ஹக்கீமின் மு.கா வையும் புறக்கணித்து தனித்து போட்டியிட முடியும் என்றால்,

மட்டக்களப்பில் சமூக பாதுகாப்புக்காக சஜித்தை புறக்கணித்து மரச் சின்னத்தில் ஹக்கீமின் மு.கா வுக்கு போட்டியிட முடியும் என்றால்,

கண்டிய முஸ்லிம் சமூகம் இழந்த 3வது பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொண்டு சமூகத்திற்கு தேவையான பணிகளை இறைவனுக்கு பயந்து கடந்த காலங்களில் செய்ததை போல் முன்னின்று செய்வதற்கு இஸ்திஹார் தனித்து சுயேற்சையாக போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது?

அவர்கள் செய்தால் சமூகப்பற்று? நான் செய்தால் சமூக துரோகமா?

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடமா?

என கேள்வியெழுப்பினார் இஸ்திஹார் இமாதுத்தீன்.

ஊடக பிரிவு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »