Our Feeds


Tuesday, August 18, 2020

www.shortnews.lk

18 மாதங்களில் 12,968 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிறைவு - 851 வழக்குகள் நிலுவை

 


கடந்த 18 மாதங்களில் 12,968 சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 851 வழக்குகள் மாத்திரமே விசாரணைகள் நிலுவையில் உள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


இதன்போது, சந்தேகநபர்கள் தொடர்பில் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய 6,149 வழக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


4,372 சந்தேகநபர்கள் தற்போதைய நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதற்காக 2,447 வழக்குகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »