Our Feeds


Tuesday, August 18, 2020

www.shortnews.lk

'அத்துருகிரிய லடியா'வின் சகா சுதா கைது - போலி ஆவணங்களும் பரிமுதல்

 


´அத்துருகிரிய லடியா´ எனப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுப்படும் குழுவின் உறுப்பினரின் ஆதரவாளரான ´சுதா´ எனப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹொகாந்தர வடக்கு பிரிவில் வைத்து நேற்று (17) விசேட அதிரடி படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்டவரிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்காக தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


சந்தேக நபர் இரண்டு மனித படுகொலைகளுடன் தொடர்புடையவர் என்பதோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் பிரத்தியேக செயலாளருக்கு சொந்தமானது என கூறப்படும் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »