Our Feeds


Friday, August 7, 2020

www.shortnews.lk

தப்பிப் பிழைத்து பாராளுமன்றம் நுழைந்தார் சம்பந்தன்

 

திருகோணமலை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இருவரும், இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஒருவரும், பொதுஜன பெரமுனவில் ஒருவரும் தெரிவாகியுள்ளார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எஸ்.தௌபீக் 43,759 வாக்குகள்,(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), இம்ரான் மஹ்ரூப் 39,029 வாக்குகள் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோரும் இலங்கை தமிழ் அரசு கட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் 21,422 வாக்குகள், பொதுஜன பெரமுனவில் கபில நுவான் அதுகோரலவும் 30,056 வாக்குகளையும் பெற்று தெரிவாகியுள்ளார்கள்.

திருகோணமலை மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே (பொதுஜன பெரமுன), பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் நால்வர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »