Our Feeds


Wednesday, August 12, 2020

www.shortnews.lk

ஜீவன் தொண்டமான் இராஜாங்க அமைச்சராக நியமனம்

 


புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது.


கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

நிகழ்வின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர், 40 இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மறைந்த முன்னால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »