Our Feeds


Tuesday, August 25, 2020

www.shortnews.lk

'உமக்கொரு வீடு, நாட்டுக்கொரு நாளை' தொனிப்பொருளில் இஸ்திஹார் தலைமையில் வீடமைப்பு திட்டம்

 

 மேன்மை தங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சமான நாளையை நோக்கிய "உமக்கொரு வீடு, நாட்டுக்கொரு நாளை" (ඔබට ගෙයක් රටට හෙටක්) எனும் பொருளுடன் வறுமையுற்றோருக்கான வீடமைப்புத்திட்டத்திற்கமைய அலவதுகொடை, பலகடுவ பகுதியில் குடும்பமொன்றுக்கான வீட்டினை அமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திலக் ராஜபக்ஷ, அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ இஸ்திஹார் இமாதுதீன், பிரதேச சபை உறுப்பினர் அமரஜீவ ஆகியோரினால் அடிக்கல் நடப்பட்டது.


அத்துடன் இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வீட்டினை அமைப்பதற்கென தனது பிரத்தியேக நிதியிலிருந்து ஒரு தொகையினையும் தவிசாளர் வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் அக்குறணை பிரதேச செயலாளர் திருமதி அபேசிங்ஹ, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நிர்வாக அதிகாரி திரு. தென்னகோன் ஆகியோர் உட்பட இன்னும் அரச அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.


ஊடக பிரிவு


Image may contain: one or more people and shoes

Image may contain: one or more people, crowd and outdoor

Image may contain: 2 people, people sitting and outdoor

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »