
அபே ஜனபல கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரிக்க கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு வருமாறு அத்துரலியே ரத்ன தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு வருகை தரவில்லை.
வேதினிகம விமலதிஸ்ஸ தேரரை ரத்ன ஹிமி கடத்தியுள்ளதாக கடந்த 19ம் திகதி ஹூனுபிட்டியே சந்திரசிரி தேரர் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸ் விசாரனைக்கு வருகை தருமாறு பொலிசார் ரத்ன தேரருக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவர் குறித்த அழைப்புக்கு ஆஜராகவில்லை.
ரத்ன தேரர் பொலிசாரின் அழைப்பை தொடர்ந்தும் நிராகரித்து வரும் நிலையில் அவரை கைது செய்ய வேண்டிவரும் என பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுவதாக சகோதர ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.