Our Feeds


Tuesday, August 18, 2020

www.shortnews.lk

ரிஷாத் பதியுத்தீனுக்கு எதிரான விசாரனை நிறைவு - CID

 


2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான விசாரணைகளை சி.ஐ.டி.யினர் நிறைவுசெய்துள்ளனர்.


விசாரணையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


ரிஷாட் பதியுதீன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 222 பஸ்களைப் பயன்படுத்தி, ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க புத்தளத்திலிருந்த தனது ஆதரவாளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றமை சி.ஐ.டி.யின் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


அந்த நேரத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த ரிஷாட் பதியூதீன் 9.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அமைச்சின் பணத்தை செலவிட்டதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »