மு.க உறுப்பினர்கள் யாரும் ஆளும் கட்சி பக்கம் தாவாமல் இருக்கும் வகையில் கட்சி கொள்கைகளுக்கு கட்டுப்படுவோம் எனக்கூறும் ஆவணமொன்றில் உறுப்பினர்களிடம் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் கையெழுத்தொன்றை வாங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
மு.க வின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிப் பக்கம் தாவுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அத்துடன் மு.கா வின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
கட்சி தாவுவதில்லை என்பதற்கான சத்தியப் பிரமான ஆவணத்தில் கட்சித் தலைவர் ஹக்கீமும் கையெழுத்திட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
