Our Feeds


Wednesday, September 2, 2020

www.shortnews.lk

முஹம்மத் நபி (ஸல்) பற்றி கேலிச் சித்திரம் மீண்டும் வெளியிட்டு உலக முஸ்லிம்களை புன்படுத்தியது “ஷார்லி ஹெப்டோ”

 

உலக முஸ்லிம்கள் தம் உயிருக்கு மேலாக நேசிக்கும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை மீண்டும் கேளி சித்திரமாக சித்தரித்து வெளியிட்டு சர்சையை கிளப்பியுள்ளது பிரான்ஸின் ஷார்லி ஹெப்டோ பத்திரிக்கை. 




முகமது நபி (ஸல்) அவர்களின் உருவம் எனக்கூறி கேலிச்சித்திரத்தை பதிப்பித்ததற்காக 2015ஆம் ஆண்டு குறித்த பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டது.


இதற்கு முன்னர் வெளியிட்ட அதே கார்ட்டூன்களை "ஷார்லீ எப்டோ" நேற்று மீண்டும் பதிப்பித்துள்ளது.


தீவிர வலதுசாரிகள், கத்தோலிக்க மதம், யூத மதம், இஸ்லாம் உள்ளிட்டவற்றின் சில கூறுகளைப் பகடி செய்வதற்காக "ஷார்லீ எப்டோ" நீண்ட காலமாக சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

இதற்கு முன்னைய தடவை இதுபோன்ற கேளிச் சித்திரம் வெளியிடப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பாரிய அளவில் கண்டன ஆர்பாட்டங்களை மேற்கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »