Our Feeds


Wednesday, September 2, 2020

www.shortnews.lk

இன, மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படும் வகையில் செயற்படும் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும்!

 

Daily Mirror - Cardinal Malcolm Ranjith His words of wisdom calmed the  nation


இன மற்றும் மத ரீதியான பிரிந்துள்ள அனைத்து இலங்கையர்களை ஒன்றிணைத்து சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலம் எழுந்துள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.


இதற்காக இளைஞர், யுவதிகள் முன்னின்று செயற்பட வேண்டியது அவசியம் என பேராயர் கனேமுல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறினார்.

´அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதால்தான் 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும் அதன் பின்னர் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட ஒற்றுமை இல்லாமல் போனது. இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட அவிசுவாசத்தால் 30 வருட யுத்தத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டது´.

நாட்டில் இன மற்றும் மத ரீதியான பிளவுகள் ஏற்பட அரசியல்வாதிகள் பொறுப்புகூற வேண்டியது அவசியம் எனவும் அரசியல்வாதிகள் இன மற்றும் மத ரீதியான கருத்துக்களை அரசியல் மேடைகளில் பிரதான பேசி பொருளாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே, இன மற்றும் மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படும் வகையில் செயற்படும் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் பாடசாலை மாணவர்களுக்கு இரு பிரதான மொழிகளும் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் எனவும் பேராயர் கூறினார்.

பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு சகல மதம் மற்றும் கலாச்சாரங்கள் அமைய வேண்டும் எனவும் அதற்காக அனைவரும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இன்றைய சூழலில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை இளைஞர், யுவதிகள் ஏற்க வேண்டியது கட்டாயம் எனவும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »