கடந்த வருடம் ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் (23.11.2020) கிழக்கு மாகாண முன்னால் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் சாட்சியம் வழங்கினார்.
காத்தான்குடியில் பேரிச்சை மரங்களை ஏன் நாட்டினீர்கள் என்று ஹிஸ்புல்லாஹ்விடம் ஆணைக்குழு வினவிய நேரத்தில் காத்தான்குடி என்பது சூடான பூமியைக் கொண்ட பிரதேசமாகும். அத்துடன் அங்கு அரபு நாட்டு மாணவர்கள் சுற்றுலாவுக்காக அதிகம் வருகிறார்கள் என்பதினால் அவர்களை கவருவதற்காக அங்கு பேரிச்சை மரங்கள் நடப்பட்டன. என தெரிவித்தார். அத்துடன் ஸஹ்ரான் ஹாஷிம் என்கிற பயங்கரவாதி கடந்த 2015 தேர்தல் காலத்தில் எனக்கு எதிராகவே செயல்பட்டான் எனவும் இதன் போது அவர் சாட்சியம் வழங்கினார்.
இன்று மீண்டும் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.