(ரூமி ஹாரிஸ்)
SLBC தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து நான் SLBC சிரேஷ்ட அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டேன். இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான செய்தியினை அவர் முற்றாக மறுத்தார்.
மேலும் SLBC முஸ்லிம் சேவையில் பயான் நிகழ்த்துவதற்கு நான்கு உலமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தற்காலிகமானவை என்றும் அது தொடர்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள SLBC முஸ்லிம் சேவை ஆலோசனை சபை கலந்தாலோசித்து வருவதாகவும் வெகுவிரைவில் இந்த தடை நீக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
