Our Feeds


Tuesday, December 22, 2020

www.shortnews.lk

09 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை - 100 மி.மீ க்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம்

 

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »