Our Feeds


Tuesday, December 8, 2020

www.shortnews.lk

தேசிய பாடசாலைகளை 1000 மாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

 



நாட்டின் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 மாக அதிகரிப்பதற்கான திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று (08) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது.

இதன் போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் 3 கட்டங்களின் கீழ் இதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று குறிப்பிட்டார்.

முதல் கட்டத்தின் கீழ் தற்பொழுது எந்தவொரு தேசிய பாடசாலையும் இல்லாத 123 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு மாகாண சபைக்கு ஒரு பாடசாலையை தெரிவு செய்து தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்யப்பட்டு, இரண்டாம் கட்டத்தின் கீழ் அடையாளம் காணப்படும் பரிந்துறைகளுக்கு அமைவாக தெரிவு செய்யப்படும் 673 பாடசாலைகள் தேசிய பாடசாலை என்ற ரீதியில் அபிவிருத்தி செய்யப்பட்டது.

இதற்கு மேலதிகமாக தற்பொழுது தேசிய பாடசாலை என்ற ரீதியில் உள்ள 373 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது இதன் நடவடிக்கை ஆகும் என்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »