Our Feeds


Sunday, December 13, 2020

www.shortnews.lk

சாய்ந்தமருதில் ஒரு குடும்பத்தில் 12 பேரில் 2 வயது குழந்தைக்கு கொரோனா உறுதி

 



சாய்ந்தமருதில், ஒரு குடும்பத்திலுள்ள 12 பேருக்குச் செய்யப்பட்ட PCR பரிசோதனையில் 2 வயதுக் குழந்தைக்கு மாத்திரம் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதனை தெரியப்படுத்தும் போது அந்த கணத்தில்  ஏற்பட்ட மரண ஓலத்தையும் அழுகுரலையும் நேற்று அனுபவத்த போது என்னை அறியாமல் எனது கண்களிலும் கண்ணீராகிவிட்டது.


இப்பிள்ளைக்கான தொற்று அன்புள்ளம் கொண்ட பிள்ளையின் பெரியப்பாவிடம் இருந்து கிடைத்துள்ளது. இதனால் தொற்றுக்குள்ளாகாத தாயுடன் பிள்ளை சிகிச்சை நிலையத்திற்கு நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்டது. 

அன்பர்களே, தயவு செய்து உங்கள் பிள்ளையின் கொரோனா பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். நீங்களும் பாதுகாப்பாக நடந்து கொள்ளுங்கள். 

என சாய்ந்தமருது பைலான் நளீம் PHI அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »