நாளை (14) காலை 5,00 முதல் கொழும்பின் சில பிரதேங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசந்த செவண குடியிருப்பு தொகுதி, ஸ்ரீமுத்து உயன குடியிருப்பு தொகுதி ஆகியன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்ஹிரு செவண ரயில் வீடமைப்பு திட்டம் மற்றும் பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்ரீசர உயன ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில்
தொடர்ந்தும் முடக்கநிலை நீடிக்கும் பிரிவுகள்
முகத்துவாரம் பொலிஸ் பிரிவு
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு
ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் பிரிவு
டாம் வீதி பொலிஸ் பிரிவு
கெசல்வத்தை பொலிஸ் பிரிவு
மாளிகாவத்தை பொலிஸ் பிரிவு
தெமட்டகொடை பொலிஸ் பிரிவு
மருதானை பொலிஸ் பிரிவு
கொழும்பு கொம்பனித் தெருவின் வேகந்த கிராம சேகவர் பிரிவு, பொரளை பொலிஸ் பிரிவில் வணாத்தமுல்ல பொலிஸ் பிரிவு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில், சாலமுல்ல கிராம சேகவர் பிரிவு, லக்ஷந்த செவன வீடமைப்புத் திட்டம், மட்டக்குளி பொலிஸ் பிரிவின் பேர்குசன் வீதியின் தென்பகுதி. கொம்பனித் தெருவின் ஹுணுப்பிட்டிய கிராம சேகவர் பிரிவு, கொழும்பு கறுவாத்தோட்டை பொலிஸ் பிரிவின் 60 ஆவது தோட்டம் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் கோகிலா வீதி.
புதிதாக முடக்கப்படும் பகுதி
வெள்ளவத்தை மயூரா பிளேஸ்.
…………………………………………………….
கம்பஹா மாவட்டத்தில்…
நாளைக் காலை நீக்கப்படவுள்ள பகுதிகள்
வத்தளை பொலிஸ் பிரிவில்
கெரவலப்பிட்டிய கிராம சேவகர் பிரிவு
ஹேகித்த கிராம சேவகர் பிரிவு
குருந்துஹேன கிராம சேவகர் பிரிவு
எவரிவத்தை கிராம சேவகர் பிரிவு
வெலிக்கடமுல்லகிராம சேவகர் பிரிவு
பேலியகொடை பொலிஸ் பிரிவில்
பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவு
தொடர்ந்து அமுலில் உள்ள பகுதிகள்
பேலியகொடை பொலிஸ் பிரிவில்
பேலியகொடைவத்தை கிராம சேவகர் பிரிவு,
கங்கபட கிராம சேவகர் பிரிவு
மீகாவத்தை, கிராம சேவகர் பிரிவு
கிரிபத்கொடை பொலிஸ் பிரிவில்
வேலேகொட வடக்கு,
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில்
தலத்துவ கிராம சேவகர் பிரிவின் எம்சி குடியிருப்புத் தொகுதி
வெயாங்கொடை பொலிஸ் பிரிவில்
ஹிரிப்பிட்டிய தெற்கு கிராம சேவகர் பிரிவன் நிதகஸ் மாவத்தை
நாளைக் காலை முதல் புதிதாக முடக்கப்படவுள்ள பகுதிகள்
வத்தளை பொலிஸ் பிரிவில்
*கெரவலப்பிட்டிய கிராம சேவகர் பிரிவில் நைதுவ பிரதேசம், வெலிக்கடைமுல்ல கிராம சேவகர் பிரிவில் துவேவத்தை.
*பேலியகொடை பொலிஸ் பிரிவில் பட்டியமுல்ல கிராம சேவகர் பிரிவில் ரோஹன விகார மாவத்தை
*கிரிபத்கொடை பொலிஸ் பிரிவில் ஹுணுப்பிட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவில் வெதிகந்த பிரதேசம்
*நிட்டம்புவ பொலிஸ் பிரிவில் திஹாரிய வடக்கு மற்றும் திஹாரிய கிழக்குக்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவில் வாரண பன்சல வீதி, கன்கொடை வீதி, ஹிந்தா மாவத்தைக்கு உட்பிரவேசிக்கும் பகுதி
……………………………………
களுத்துறை மாவட்டத்தில்…
*புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் வேகந்கந்தை கிழக்கு, வேகந்கந்தை மேற்கு கிராம சேவகர்கள் பிரிவு மற்றும்
‘* குடா கினிட்டியன்கல கிராம சேவகர் பிரிவில் மரிக்கார் வீதி.