2020 ஆம் ஆண்டின் (சிறந்த) மனிதராக: பைடன் கமலா, ஹரிஸ் டைம் சஞ்சிகையினால் தெரிவு.
அமெரிக்காவின் டைம் சஞ்சிகையினால் 2020 ஆம் ஆண்டின் மனிதராக ஜோ பைடன், கமலா ஹரீஸ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்விருவரும் அமெரிக்காவின் ஜனாதிபதியாகவும், உப ஜனாதிபதியாகவும் அடுத்த மாதம் பதவியேற்கவுள்ளனர். அமெரிக்க வரலாற்றில் உப ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள முதலாவது பெண் கமலா ஹரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வோர் ஆண்டும் உலகில் தம் செயல்பாட்டால் நல்லதுக்கோ தீயதுக்கோ பேரளவில் அறியப்பட்ட மனிதர்கள், குழுக்கள், கருத்துகள், கருவிகள் ஆகியோரை டைம் ச்ஞ்சிகை ஆண்டின் மனிதரகளாக (Person of the Year) தெரிவு செய்து சிறப்புப் பட்டம் அளிப்பதுடுன் அதையொட்டி சிறப்பிதழையும் வெளியிடுகிறது.
‘ஜோ பைடனும், கமலா ஹரிஸம் மீட்டமைத்தலையும், புதுப்பித்தலையும் முன்வைத்துள்ளனர். ஒரு நூற்றாண்டு காலத்தில அதிக எண்ணிக்கையான வாக்களிப்புகளின் பின்னர் அவர்கள் 81 மில்லியனுக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலொன்றில் மிக அதிக எண்ணிக்கையானது. ட்ரம்பைவிட 7 மில்லியன் வாக்குகளை அதிகம் பெற்றுள்ளனர். மோதல்களமான 5 மாநிலங்களை மாற்றி, அமெரிககா தான் விற்பனை செய்ததை வாங்கியுள்ளது’ என டைம் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில் பராக் ஒபாமா, 2016 ஆம் ஆண்டில் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரை ஆண்டின் சிறந்த மணிதர்களாக டைம் சஞ்சிகை தெரிவுசெய்திருந்தது. கடந்த வருடம் காலநிலை செயற்பாட்டாளர் கிறேட்டா துன்பேர்க் இந்த கௌரவத்தைப் பெற்றிருந்தார்.
ஜனாதிபதி பராக் ஒபமாவின் பதவிக் காலத்தில் 8 வருடங்கள் உப ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜோ பைடன். 78 வயதான அவர், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் மிக வயதானவராக உள்ளார். 56 வயதான கமலா ஹரிஸ் அமெரிக்க வரலாற்றில் முதலாவது பெண் உப ஜனாதிபதியாக விளங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
