ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு நாளை மறுதினம் (13) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹாரிஸ் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைமைகள், விசேட கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிகளின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கொரோனாவினால் உயிரிழக்கும் அனைவரின் உடல்களையும் தகனம் செய்ய வேண்டுமென்பதில் சுகாதராத் தரப்பினர் கடுமையான தீர்மானத்தை எடுத்துள்ள நிலையில், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அவ்வாறு செய்யாமல் அடக்கம் செய்ய வேண்டும் என்ற விடயத்தில் எமது கட்சியின் தலைவரும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்களும் அதிக அக்கறையுடன் செயற்படுகிறோம்.
இது தொடர்பில் தொடர்ச்சியாக அரச தரப்புடன் பேசி வருகிறோம். இந்த விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்புகளுக்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
