Our Feeds


Monday, December 14, 2020

www.shortnews.lk

ஜனாஸா அடக்கத்திற்கு இவ்வார இறுதிக்குள் அனுமதி கிடைக்க வாய்ப்பு - அடக்கத்திற்கு 2 இடங்கள் அடையாளம்

 



MFM பசீர்


கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொட்ர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் அதனை தொடர்ந்து முன்னால் அமைச்சரும் அரசாங்கத்தின் மிக முக்கியமானவருமான பசில் ராஜபக்ஷவுடனும் நடத்தப்பட்ட இரு வேறு கலந்துரையாடல்களின் போது ஜனாஸாக்களை உள்நாட்டில் அடக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


அடக்கம் செய்வது தொடர்பில் முஸ்லிம்கள் செரிவாக வாழும் நிலக் கீழ் நீர் மட்டம் மிக ஆழத்தில் உள்ள வடக்குக் கிழக்கின் இரு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் இறுதி முடிவு இன்னும் எட்டப்பட வில்லை. 


பெரும்பாலும் இவ்வாரம் சுகாதார அமைச்சின் தொழிநுட்பக் குழு ஊடாக முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி அளிப்பது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளதுடன், அதனையடுத்து உள்நாட்டிலேயே ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படலாம் என அரசின் உள்ள தகவல்கள் தெரிவித்துள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »