Our Feeds


Friday, December 11, 2020

www.shortnews.lk

இன்று வரை 35, 114 குடும்பங்களைச் சேர்ந்த 95, 825 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 


 

(செ.தேன்மொழி)


கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக 35, 114 குடும்பங்களைச் சேர்ந்த 95, 825 பேர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 14, 332 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை சில மாவட்டங்களில் 9 பொலிஸ் பிரிவுகளும், 25 கிராம சேவகர் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகள் மற்றும் தோட்டப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள முன்னெடுப்பட்டுள்ளன.

இந்தப் பரிசோதனைகளின் முடிவுகளுக்கமைய புதிய வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாவிட்டால் அவர்களால் உப கொத்தணிகள் உருவாக வாய்ப்பில்லை என்று உறுதி செய்து அந்தப் பகுதிகளை விடுவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »