Our Feeds


Monday, December 21, 2020

www.shortnews.lk

கொரோனா ஜனாஸாக்களை எரிப்பதா? அடக்குவதா? நிபுணர் குழுவில் முஸ்லிம்களை இணைத்து விரிவுபடுத்த முடிவு

 



கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்குவதா? எரிப்பதா? என்ற இறுதித் தீர்மானத்திற்கு வருவதற்காக நியமிக்கப்பட்ட குழு விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும் குறித்த விரிவாக்கத்தின் போது முஸ்லிம் உறுப்பினர்களையும் வைரொலஜிஸ்ட்களையும் இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.


இதன் அடிப்படையில் குறித்த குழு இந்த வாரம் விரிவாக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவில் இணைக்கப்படவுள்ள புதிய நிபுணர்கள் யார் என்பதை மருத்துவர் அலேச குணரத்ன தெளிவுபடுத்த வில்லை.

கொரோனாவில் உயிரிழப்போரின் உடல்களை எரிப்பது மட்டுமே தீர்வு என நிபுணர் குழு சமீபத்தில் கூறியிருந்த நிலையில் மேலும் ஆராய்ந்து இறுதி முடிவெடுக்க நிபுணர் குழு தீர்மானித்துள்ளது.


-colombogazette

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »