வாகன இலக்க தகட்டில் உள்ள ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக ஒருவரின் பெயரைப் பொறிக்கும் முறையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
குறித்த திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அத்திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளில் இதுபோன்ற ஒரு நடைமுறை செயல்படுத்தப்படுகின்றது.
இதற்கிடையில், ஒரு இலட்சம் என்ற எண்ணுக்கு முன்னால் சிறப்பு எண்களை வழங்குவதன் மூலம் மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு சுமார் 1.18 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது.
மேலும், அத்தகைய எண்ணை வழங்குவதற்கு ஒரு மில்லியன் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
இருப்பினும், வர்த்தமானி அறிவிப்பு இன்றி சுமார் மூன்று ஆண்டுகளாக இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
எனவே, சிறப்பு எண்களை வழங்குவதற்குப் பணம் வசூலிக்கும் திட்டத்திற்கு நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
