இன்று (09) முற்பகல் மாளிகாவத்தையில் பொலிசாருக்கும், பொது மக்களுக்குமிடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது.
லோக்டவுனை மீறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியதாக கூறி பொது மக்கள் வீதிக்கு இறங்கினர். இந்நிலையில் அங்கு வந்த மேலதிக பொலிசார் மற்றும் அரசில் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற உடனடி பேச்சுவார்ததைகளை தொடர்ந்து நிலைமை சுமுக நிலையை அடைந்தது.
கடந்த சில நாட்களாக கொழும்பில் லொக்டவுன் செய்யப்பட்டுள்ள பகுதி வாழ் மக்கள் வாழ்வாதாரம் கோரி தொடர் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
