Our Feeds


Friday, December 11, 2020

www.shortnews.lk

நேற்றும் கொழும்பிலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

 



கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 538 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30,613 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 304 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 28 பேரும், கண்டி மாவட்டத்தை சேர்ந்த 38 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் வௌிநாட்டில் இருந்து வந்த 68 பேரும் கொவிட் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 26,981 ஆக அதிகரித்துள்ளது . இவர்களில் 18, 853 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 461 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,261 ஆக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் 8,206 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகினறனர்.

நேற்றைய தினம் இரண்டு கொவிட் தொற்று காரணமாக இருவர் பதிவாகியிருந்த நிலையில் இதுவரை 146 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று நாட்டினுள் மேற்கொள்ளப்பட்ட 14,416 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »