Our Feeds


Friday, December 11, 2020

www.shortnews.lk

ஜனாஸாவை எரிக்காதே - வவுனியாவில் தனி நபராக மவ்லவி ஒருவர் போரோட்டம்

 



(கதீஸ்)

கொவிட் -19 தாக்கத்தினால் இறந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டாமேன தெரிவித்து வவுனியா நகரில் உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக தனி நபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (11) காலை 11.00 மணியளவில் வவுனியாவை சேர்ந்த மௌலவி முனாஜித் என்பவரால் முன்னெடுக்கப்பட்டது.

கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கையை  அரசாங்கம் நிறுத்த வேண்டும். மேலும் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சர்வதேச சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய இலங்கை அரசு அனுமதியளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »