பொலன்னறுவை மட்டக்களப்பு வீதியில் மன்னம்பிட்டி கல்லெல்ல பிரதேசத்தில் சிறிய வாகனங்களின் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடும் மழையின் காரணமாக வீதி நீரில் மூழ்கியுள்ளதே இதற்கு காரணமாகும். சோமாவத்தி புனித பூமிக்கு சிறிய வாகனங்கள் செல்வதும் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மாத்தளை கலேவல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
