கொவிட்-19 ஆல் இறந்த நபரின் உடல் அகற்றப்படாவிட்டால் நாளை (24) முதல் கடமைகளில் இருந்து விலகுவதாக காலி கராப்பிட்டிய மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19க்கு சிகிச்சை பெற்று வந்த காலி கட்டுகொடவில் வதியும் 84 வயது முதியவர் கடந்த டிசம்பர் 19 இரவு உயிரிழந்தார். டிசம்பர் 21முதல் இறந்தவரின் உறவினர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் படி உடல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காலி மேலதிக நீதிவான் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறுவுறுத்தல்கள் வரும் வரை சடலம் கராப்பிட்டிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் இருப்பதானது மிகவும் ஆபத்தானது. எனவே சடலத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என சட்ட மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர். இன்றைய கடமைகளை ஓரளவு மட்டுமே நிறை வேற்றுவதுடன் இன்று அகற்றப்படாத வரை நாளை முழுமையாக எமது பணிகள் நடைபெறாது என சட்ட மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
