(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
மாரடைப்பு காரமணாக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் இன்று (24) அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொவிட் -19 காரணமாக இன்றிரவு உயிரிழந்துள்ளார்.
இதனை அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். அகிலன் “மெட்ரோ நியூஸ்“ இணையத்துக்கு உறுதிப்படுத்தினார்.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 58 வயதான இந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார். அவரது உடல் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று உயிரிழந்தவர் கொவிட் தொற்று அடையாளம் காணப்படாத அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியைச் சேர்ந்த மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர் எனவும் அவர் கூறினார்.
