Our Feeds


Wednesday, December 9, 2020

www.shortnews.lk

அமெரிக்காவின் பைஸர் (Pfizer) நிறுவன கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் சிறப்பானது

 



அமெரிக்காவின் பைஸர் (Pfizer) ஜேர்மனியின் பயோஅன்ட்டெக்  (BioNTech) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொவிட்-19 தடுப்பூசியானது 95 சதவீதம் வினைத்திறன் மிக்கது என அமெரிக்க அரச ஒழுங்படுத்துனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனால் அமெரிக்காவிலும் இத்தடுப்பு மருந்து அவசரகால பாவனைக்கு அனுமதிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இத்தடுப்புமருந்து ஏற்கெனவே பிரிட்டனில் நேற்று முதல் பொதுமக்களுக்கு செலுத்தப்படுவது ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பைஸர் பயோஅன்ட்டெக் தடுப்பு மருந்து, சோதனைத் தரவுகள், சீரானது உள்ளது எனத் தெரிவிக்கும் ஆவணத்தை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எவ்.டி.டீ) வெளியிட்டுள்ளது.

இது குறித்த சம்பிரதாய தீர்மானத்கதுக்காக மேற்படி நிர்வாகம் வியாழக்கிழமை ஒன்று கூடவுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »