நாளை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தரும் விமானங்களை இலங்கையில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய ராச்சியத்தில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் காரணத்தினாலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதுடன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இது போன்ற பயணத்தடையை ஐக்கிய ராச்சியத்திற்கு விதித்துள்ளன.